உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளிக்கு சரமாரி வெட்டு தலைமறைவான 2 பேருக்கு வலை

தொழிலாளிக்கு சரமாரி வெட்டு தலைமறைவான 2 பேருக்கு வலை

அஞ்செட்டி, கூலித்தொழிலாளியை வெட்டி கொலை செய்ய முயன்ற, இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி கோரிபாளையத்தை சேர்ந்தவர் மாதேஷ், 46; கூலித்தொழிலாளி. இவரது தங்கை கவிதா, 28, என்பவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த பிரபு, 32, என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரபு அடிதடி வழக்குகளில் சிக்கியதால், தங்கை கவிதா மற்றும் அவரது குழந்தைகளை, பென்னாகரம் அழைத்து வந்து, தன் ஊரில் மாதேஷ் குடி வைத்தார். இதனால் பிரபு ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த, 19ல், நாகம்மா, 65, என்ற பெண்ணை தாக்கிய வழக்கில், பிரபு, சிவராஜ், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கும் மாதேஷ் தான் காரணம் என பிரபு நினைத்தார். கடந்த, 4 நாட்களுக்கு முன் சிவராஜ், பிரபு இருவரும் ஜாமினில் வந்தனர். அவர்கள், மாதேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு, செட்டேரி சாலையில் உள்ள தன் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் மாதேஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரபு, சிவராஜ் ஆகிய இருவரும், மாதேஷை சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புகார்படி, அஞ்செட்டி போலீசார், தலைமறைவாக உள்ள பிரபு, சிவராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை