உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளி வீட்டிற்கு தீ வைப்பு

தொழிலாளி வீட்டிற்கு தீ வைப்பு

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மாடக்கல் அருகே பேலாளம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்-வதப்பா, 61, கூலித்தொழிலாளி; கடந்த, 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். திடீரென வீட்டில் தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அஸ்வதப்பா-விற்கு தகவல் தெரிவித்தனர். தேன்கனிக்-கோட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, தீயை போராடி அணைத்தனர். ஆனால், வீட்டிற்குள் இருந்த மொத்தம், 43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என, போலீசார் சந்தேக்கின்றனர். அஸ்வதப்பா புகார் படி, தளி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை