உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திருக்குறளில் திருப்பணிகள் அரசு பள்ளியில் பயிலரங்கம்

திருக்குறளில் திருப்பணிகள் அரசு பள்ளியில் பயிலரங்கம்

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 'திருக்குறளில் திருப்பணிகள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நேற்று நடந்தது. பயிலரங்கத்திற்கு பள்ளி உதவி தலைமையாசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பற்குணன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதுகலை தமிழாசிரியர் சரவணன், திருக்குறளை நன்கு பயிற்றுவித்தார். 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். திருக்குறளில் புலமை வாய்ந்த மாணவர்களை பாராட்டி பரிசு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !