ஊத்தங்கரை ஜி.ஹெச்.,ல் உலக சுற்றுச்சூழல் தினம்
ஊத்தங்கரை, ஊத்தங்கரை, அரசு மருத்துவமனையில், உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். அவர், உலக சுற்றுச்சூழல் தினம் குறித்தும், பிளாஸ்டிக் மாசுபாட்டை எவ்வாறு தடுப்பது, பூமி வெப்பமயமாவதை தடுக்க மக்கள், தங்கள் வீட்டில் நடக்கும் விழாக்களில் மரக்கன்றுகளை நடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மஞ்சப்பை பயன்பாடு, வெயில் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கிக்கூறி, மரக்கன்றுகளை வழங்கினார்.இதில், செவிலியர் கண்காணிப்பாளர் சுகாசினி, செவிலியர் விஜயா மற்றும் பணியாளர்கள் சேகர், ஜெயந்தி, கலைச்செல்வி, பவ்யா, சுஜாதா, சேரலாதன், சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.