உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு

புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு

கிருஷ்ணகிரி:புரட்டாசி மாதத்தின், 2வது சனிக்கிழமையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டியிலுள்ள வெங்கட்டரமண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.வேலம்பட்டி அருகே பெரியமலை கோவில், 50 அடி உயர மலை உச்சியிலுள்ள ஐகொந்தம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி காட்டு வீரஆஞ்சநேயர் கோவில் வெங்கடரமண சாமி, கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள், பாலேக்குளி அனுமந்தராய சுவாமி கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி