இளம் பெண் மாயம் தொழிலாளி மீது புகார்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தை சேர்ந்தவர் அபிநயா, 21. அதே பகுதியில் உள்ள மெடிக்கல்சில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், கந்திகுப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுஹேல், 25, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.A