உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பண்ணையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வாலிபர் கைது; மேலும் 3 பேருக்கு வலை

பண்ணையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வாலிபர் கைது; மேலும் 3 பேருக்கு வலை

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, ஆர்கானிக் பண்ணையில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய வாலிபர் கைது செய்யப்-பட்டார்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் பாலவர் தெருவை சேர்ந்த விஜய், 32. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோலட்டியில் உள்ள தனியார் ஆர்-கானிக் பண்ணையில் மேலாளராக உள்ளார். கடந்த மாதம், 24ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, பண்ணை கேட்டை மூடி விட்டு, அங்குள்ள அறைக்கு துாங்க சென்றார். அடுத்த நாள் காலையில் பார்த்த போது, பண்ணையில் இருந்த, 20,000 ரூபாய் மதிப்புள்ள மொத்தம், 5 சந்தனமரங்களை வெட்டி மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரிந்தது. இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் விஜய் புகார் செய்தார்.விசாரணையில், வேப்பனஹள்ளி அருகே உண்டியல் நத்தம் பகு-தியை சேர்ந்த பசவராஜ், 28, மற்றும் அவரது நண்பர்களான ஹரிஷ், ஸ்ரீராம், மாறன் ஆகிய, 4 பேர் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரிந்தது. பசவராஜை கைது செய்து, அவரி-டமிருந்து, டி.வி.எஸ்., ரேடான் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை