மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி
05-Oct-2024
கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே உள்ள நாயனத்தியூரை சேர்ந்தவர் சதீஷ், 28. இவர், பர்கூரிலுள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார். சதீஷ் கடந்த, 25ல் இரவு ஹீரோ பேஷன் புரோ பைக்கில், கிருஷ்ணகிரி - சென்னை சாலை கனிமேடு டாமின் குடோன் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பிக் அப் வேன் மோதியது. இதில் படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2024