உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கார் பள்ளத்தில் உருண்டு டிரைவர் பலி

கார் பள்ளத்தில் உருண்டு டிரைவர் பலி

கொட்டாம்பட்டி : திருச்சியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கங்காதரன்(28). இவர் நேற்று அதிகாலை மாருதி ஆல்டோ காரில் திருச்சியிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். காரை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கார்த்திகேயன்(28) ஓட்டினார். காலை 6 மணிக்கு கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டி மோட்டல் அருகே அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் இடதுபுறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் அதே இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கங்காதரன் திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை