உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ----பல்கலை மகளிர் கோ கோ

----பல்கலை மகளிர் கோ கோ

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கோ கோ போட்டிகள் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது.முதல் அரையிறுதி போட்டியில் லேடிடோக் கல்லுாரி 11 - 2 புள்ளிகளில் இ.எம்.ஜி. யாதவா கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் பாத்திமா கல்லுாரி 9 - 3 புள்ளிகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியை வீழ்த்தியது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி 8 - 4 புள்ளிகளில் யாதவா கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 13 - 7 புள்ளிகளில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை