உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாடக மேடை திறப்பு விழா

நாடக மேடை திறப்பு விழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 9 லட்சத்தில் நாடக மேடை, வேடர் புளியங்குளத்தில் ரூ. 7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்து திறந்து வைத்தார். மாநகராட்சி கவுன்சிலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். காங்., நிர்வாகிகள் சரவணபகவான், காசி, சுப்பிரமணி கலந்து கொண்டனர். தென்பழஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டிக்கொடுக்குமாறு ஆசிரியர்கள் மாணிக்கம் தாகூரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை