தினமும் 100 மரக்கன்றுகள்
மதுரை,: மதுரை மாவட்டத்தில் இளம் மக்கள் இயக்கம் சார்பில் தினமும் 100 மரக்கன்றுகள் ஆண்டுமுழுவதும் நடும் திட்டம் துவங்கப்பட்டது. இயக்க நிறுவனர் சோழன் குபேந்திரன் தலைமையில் அப்பன்திருப்பதி முதல் கள்ளந்திரி வரை ரோட்டின் இருபுறமும் நடப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.