வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது மூஞ்சியே இன்ஸ்பெக்டர் மாதிரி இல்லையே. பெண் ரௌடி மாதிரிதான் இருக்கிறது. இதையெல்லாம் கல்லால் அடித்தே கொல்லணும்.
திருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 30; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மனைவி அபிநயா, 29; சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர். இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடால் சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இருதரப்பும் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் கீதா, 50, விசாரித்தார்.திருமணத்தின் போது பெற்றோர் வீட்டில் தந்த நகைகளை ராஜேஷிடம் வாங்கி தருமாறு, அபிநயா போலீசில் கூறினார். இதையடுத்து, 102 சவரன் நகைகளை கீதாவிடம் ராஜேஷ் ஒப்படைத்தார். இதை அபிநயா குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், தனியார் நிதி நிறுவனத்தில், 43 லட்சம் ரூபாய்க்கு கீதா அடகு வைத்தார். ராஜேஷ் அளித்த புகாரில், ஒரு மாதத்திற்கு முன் கீதா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதனால், சில நகைகளை மட்டும் திருப்பிக் கொடுத்த கீதா, 38 சவரன் நகைகளை தராமல் இழுத்தடித்தார். அவரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நகைகளை அடகு வைத்த பணத்தை கடன்காரர்களுக்கு, 'செட்டில்' செய்ததாக கீதா தெரிவித்தார். இவரது கணவர் சரவணன், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இது மூஞ்சியே இன்ஸ்பெக்டர் மாதிரி இல்லையே. பெண் ரௌடி மாதிரிதான் இருக்கிறது. இதையெல்லாம் கல்லால் அடித்தே கொல்லணும்.