உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ஸ்பாக்களில் விபச்சாரம் பெண்கள் உட்பட 18 பேர் கைது

மதுரை ஸ்பாக்களில் விபச்சாரம் பெண்கள் உட்பட 18 பேர் கைது

மதுரை, : மதுரையில் 'ஸ்பா' என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியதில் பெண்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரையில் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவில் துணை கமிஷனர் குமார், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையிலான போலீசார் குழு ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது.இதில் புதுார் கற்பகம்நகர் 4வது தெருவில் 'லா வில்லானா' என்ற பெயரிலான ஸ்பாவில் விபச்சாரம் நடந்தது உறுதியானது. அதன் உரிமையாளர் கார்த்திக் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த ஸ்பா திலீபன் என்பவரின் பெயரில் உள்ளதால் அவரை போலீசார் தேடுகின்றனர்.* மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் 'நியூ கேலக்ஸி' என்ற பெயரில் நடந்த 'ஸ்பா'வில் 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்ச்சங்கம் ரோட்டில் ஒரு வளாகத்தில் 4வது மாடியில் செயல்பட்ட ஒரு சென்டரிலும் 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ