தென்காசி, : தென்காசி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் டாக்டர் ராணி 1லட்சத்து 96 ஆயிரத்து 199 ஓட்டுகள்வித்தியாசத்தில் அ.தி.மு.க.,கூட்டணியின் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை வென்றார். இத்தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக டாக்டர் ராணி, அ.தி.மு.க.,கூட்டணியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ., கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் உட்பட 15 பேர் போட்டியிட்டனர்.மொத்தம் 24 சுற்றுகளாகஓட்டுக்கள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலேயே தி.மு.க., வேட்பாளர் ராணி 16 ஆயிரத்து464 ஓட்டுகளுடன் 6 ஆயிரத்து 91 ஓட்டுகள் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி 10 ஆயிரத்து 373 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணியில் ஜான்பாண்டியன் 5 ஆயிரத்து 185 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் இசை மதிவாணன் 6 ஆயிரத்து 798 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க., வேட்பாளரே முன்னிலையில் இருந்தார். 2, 4, 6, 9, 10, 18, 22வது சுற்றுகளில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன், அ.தி.மு.க., கூட்டணி புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமியைவிட கூடுதல் ஓட்டுகளை பெற்றிருந்தார். 12வது சுற்றில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்இசை மதிவாணன், பா.ஜ., கூட்டணியின் ஜான்பாண்டியனைவிட கூடுதலாக 1880 ஓட்டுகளைப் பெற்றிருந்தார். 27 வது சுற்றில் 2ம் இடத்தில் பா.ஜ.,வும், 3ம் இடத்தில் நா.த.க.,வும், 4ம் இடத்திற்கு அ.தி.மு.க.,வும் தள்ளப்பட்டது. தபால் ஓட்டுகளைப் பொறுத்தவரை தி.மு.க.,வை அடுத்து பா.ஜ.,வும், 3வது இடத்தில்நா.த.க.,வும், 4வது இடத்திற்கு அ.தி.மு.க., வும் தள்ளப்பட்டது.