மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
53 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
54 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
56 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
57 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
57 minutes ago
மதுரை, : மதுரை டவுன் ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள 99 ஆக்கிரமிப்பு கடைகள் நாளை (ஜூலை 1) ஹிந்து சமய அறநிலையத்துறை அகற்ற உள்ளது.இத்தெப்பக்குளத்தைச் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் விற்பனை, சர்வீஸ் செய்யும் கடைகள் உள்ளன. குளத்தின் கரைகளை மறைத்து கடைகள் வைத்துள்ளதால் மைய மண்டபத்தில் உள்ள கலைநயமிக்க நீராழி மண்டபத்தின் தோற்றம் வெளியே தெரிவதில்லை. தவிர கடைகளின் கழிவுநீர், குப்பை சேருமிடமாகவும் தெப்பக்குளம் மாற்றப்பட்டது.இதனால் கடைகளை காலிசெய்யுமாறு உரிமையாளர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் கொடுத்தது. இதை எதிர்த்து பெருமாள் தெப்பக்குளம் சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 8 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில் கடைகளை காலி செய்வதற்கான அறநிலையத்துறை இணைகமிஷனரின் உத்தரவை கோர்ட் உறுதிசெய்தது. அரசு செயலரிடம் சீராய்வு மனுக்கள் உரிமையாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதுவும் தள்ளுபடியான நிலையில், நாளை மதியம் 12:00 மணிக்கு 99 கடைகளை அகற்ற அறநிலையத்துறை தயாராகி வருகிறது.
53 minutes ago
54 minutes ago
56 minutes ago
57 minutes ago
57 minutes ago