உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊருணியை சீரமைக்க வழக்கு

ஊருணியை சீரமைக்க வழக்கு

மதுரை : மதுரை உத்தங்குடி ஸ்ரீராம்நகர் விரிவாக்கம் குருநகர் குடியிருப்போர் நலச் சங்கம் துணைத் தலைவர் தவமணி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:உத்தங்குடியில் அரசு பள்ளி அருகே உள்ள ஊருணி, பெரியாறு-வைகை பாசன கால்வாய் நீரை நம்பியுள்ளது. உத்தங்குடி முதல் விவசாயக் கல்லுாரிவரை ரோடு விரிவாக்கத்தின்போது கால்வாய் சேதமடைந்தது. நீர் வரத்து, வெளியேற்றம் தடைபட்டது. கால்வாய் மற்றும் ஊருணியை சீரமைக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: ஊருணியை சர்வே செய்து கலெக்டர், பெரியாறு-வைகை பாசன கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் அடுத்தவாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ