மதுரையில் போதையில் போலீசுடன் மல்லுக்கட்டு ஏட்டுக்கு கால்முறிவு
மதுரை : மதுரையில் நள்ளிரவில் ரோந்து வந்த போலீஸ் ஏட்டுவிடம் போதை இளைஞர் தகராறு செய்து மல்லுக்கட்டியதில் ஏட்டுவின் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.மதுரை கீரைத்துரை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சக்திவேல். நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். தெற்குவாசல் பகுதியில் உள்ள திரவியலிங்கேஸ்வரர் கோயில் தெரு அருகே வந்தபோது 2 பேர் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு சக்திவேல் கண்டித்தார்.இருவரில் ஒருவர் சென்ற நிலையில், கீரைத்துரையைச் சேர்ந்த விஜய்காந்தி 20, மட்டும் செல்லாமல் போதையில் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். கண்டித்த சக்திவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருவரும் கட்டிபுரண்டதில் சக்திவேலின் வலது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. வாக்கிடாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிற போலீசார் அங்கு வந்தனர். தனியார் மருத்துவமனையில் சக்திவேலை அனுமதித்தனர். விஜய்காந்தியை கைது செய்தனர்.