| ADDED : ஜூலை 04, 2024 01:52 AM
தெருநாய் தொல்லைமதுரை சொக்கலிங்க நகர் 7வது மெயின் ரோட்டில் தெருநாய்கள் அதிகளவில்உலா வருகின்றன. நோய் தொற்றுடன் சுற்றித் திரிவதால் பாதிப்பு அபாயம் அதிகமுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினேஷ் குமார் சொக்கலிங்க நகர்விபத்து அபாயம்மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர், ஜெய் நகர், நேரு நகர் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் ரோட்டைக்கடப்பது சிரமமாகஉள்ளது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஹரிஷ் முத்துராமசாமி துரைசாமி நகர்குண்டுகுழி ரோடுகள்தனக்கன்குளம் ஊராட்சி குறிஞ்சி நகர் 12வது தெரு ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் விழுந்து எழுகின்றனர். ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் தரமான ரோடு அமைக்க வேண்டும்.- செல்லப்பா ராமன், குறிஞ்சி நகர்ஆக்கிரமிப்புச் சாலைமதுரை அழகர்கோவில் ரோடு பாலாஜி நகர் அருகே கடைகளால் நான்குவழிச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்லவும், நடந்து செல்வதற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி அபராதம் விதிக்க வேண்டும்.- வெங்கடேஷ், பாலாஜி நகர்பள்ளங்களை மூடுங்கய்யாமதுரை அண்ணாநகர் 80 அடி மெயின் ரோட்டில் 5 நாட்களுக்கு முன் டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் கேபிள் ஒயர் பதிக்க தோண்டிய பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் டூவீலர்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பள்ளங்களை சமன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். - நீலகண்டன், கீழவாசல் மேம்பாலத்தில் விரிசல்சோழவந்தானில் புதிதாக கட்டிமுடித்த ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள், விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவுரிநாதன், சோழவந்தான்