உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருச்செந்துார் அருகே விபத்து மதுரை எஸ்.ஐ., பலி

திருச்செந்துார் அருகே விபத்து மதுரை எஸ்.ஐ., பலி

திருநெல்வேலி: மதுரை மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 38. துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ., யாக பணியாற்றி வருகிறார்.இவர் தனது காரில் போலீஸ் ஏட்டு நாகராஜன் 43, போலீஸ்காரர் லோகேஸ்வரன் 34, ஆகியோருடன் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்றார்.துாத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ராஜசேகர் 38. இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர்.இவர் குடும்பத்தினர் 11 பேருடன் ஒரு வேனில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி சாலையில் வந்து கொண்டிருந்தனர். மாலை 5:00 மணியளவில் திருச்செந்தூரிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் நத்தைகுளம் திருப்பத்தில் வேன், கார் மீது மோதியது இதில் கார் பலத்த சேதமற்றது.காயமுற்ற எஸ்.ஐ., உட்பட மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை