உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதியோர்கள் விரும்பும் அக்குபஞ்சர் சிகிச்சை

முதியோர்கள் விரும்பும் அக்குபஞ்சர் சிகிச்சை

மதுரை: கை, கால், முதுகுவலியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் முதியோர்கள் யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு துறையில் அக்குபஞ்சர் சிகிச்சை பெறுவதை விரும்புகின்றனர்.மருத்துவர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: சீனாவில் பயன்படுத்தப்படும் அக்குபஞ்சர் முறை நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. கை, கால், முதுகுவலியுடன் வருபவர்களுக்கு எண்ணெய் மசாஜ், லைட், நீராவி தெரபி, மண் சிகிச்சை, வாழையிலை சிகிச்சை, யோகாவுடன் அக்குபஞ்சர் சிகிச்சை சேர்த்து வழங்குகிறோம். அரை இன்ச், ஒரு இன்ச் நீளத்தில் உள்ள ஊசிகளை நோயாளிகளின் வலிக்கேற்ப 5 முதல் 10 எண்ணிக்கையில் குத்தி வைப்போம். கால்மணி நேரம் கழித்து ஊசிகளை எடுத்துவிடலாம். வயதான நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக மாதம் இரண்டு முறை இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்