உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அப்பள வியாபாரிகள் ஆலோசனை

அப்பள வியாபாரிகள் ஆலோசனை

மதுரை: உளுந்தம் பருப்பு விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்’ என, மதுரை கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். சங்கத் தலைவர் இளங்கோ, செயல் தலைவர் சீனிவாசன், செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் பாலமுருகன், பொருளாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர். அப்பளத் தயாரிப்புக்கு உளுந்தம்பருப்பு, அரிசிமாவு இரண்டும் தேவை. அதை பேக்கிங் செய்ய அட்டைப் பெட்டி தேவை. மூன்று மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் அப்பளத் தயாரிப்பு பாதித்துள்ளது. அப்பள விலையை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு உளுந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ