மேலும் செய்திகள்
இன்று இனிதாக>> திருப்பூர்
25-Feb-2025
வாடிப்பட்டி; பரவையில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாலை 6:00 மணி கூட்டத்திற்கு மக்களை ஈர்க்க 5:00 முதல் 7:00 மணிவரை எம்.ஜி.ஆர்., பாடல் நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நிர்வாகிகள் பேசினர்.கூட்டத்திற்கு இரவு 8:45 மணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு வந்தார். 10:15க்கு பேச்சை முடித்தார். கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த அசைவ பிரியாணியை, அருகே இருந்த விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மார்நாடு கருப்பு சுவாமி கிராம கோயில் வாசலில் வைத்து 11:30 வரை விநியோகித்தனர்.விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி பாலாஜி கூறுகையில், ''கூட்டம் நடத்தி பிரியாணி வினியோகிப்பதில் தி.மு.க., அ.தி.மு.க.,வினரிடையே ஒற்றுமை உண்டு. மக்களை நள்ளிரவு வரை பாரம்பரியமான கோயில் முன் நிறுத்தி வைத்து அசைவ உணவு வழங்கியதை தவிர்த்து இருக்கலாம்'' என்றார்.
25-Feb-2025