உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா...

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் சரவண முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் போஸ் பாப்பையன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க பாபு சரவணன், பாலாஜி, ஓய்வு பெற்ற ஆசிரியர் செங்கிஸ்கான், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் அங்காளஈஸ்வரி பங்கேற்றனர். ஆசிரியை ரம்யா தொகுத்து வழங்கினார், நாகலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ