விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை : தேசிய கண்தான வாரவிழாவை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டீன் தர்மராஜ், துறைத்தலைவர் கவிதா வைத்தனர்.அவர்கள் கூறுகையில், 'இந்தியாவில் ஆண்டுதோறும் ஒருலட்சம் பேருக்கு கண்தானம் தேவைப்படுகிறது. அதில் பாதியளவே தற்போது பூர்த்தியாகிறது என்பதால் கண்தானம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை' என்றனர். மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் முரளிதரன், சரவணன், டாக்டர்கள் திரிபுரசுந்தரி, செந்தாமரை கண்ணன் உட்பட டாக்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.