மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு
09-Jun-2026
மதுரை, ஜூன் 20 – மதுரை தியாகராஜர் நன்முறை மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதல்படி போதைப்பொருள் ஒழிப்பு மன்றம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொறுப்பு தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் கார்த்திக் வரவேற்றார். தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்தாய், தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி ஒழுக்கம், நன்னடத்தை, போதை ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர் சாரதி நன்றி கூறினார். மாணவர்கள் போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.
09-Jun-2026