உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா

அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா

சோழவந்தான், : சோழவந்தானில் செண்பகம் பிள்ளை, முத்துப்பிள்ளை பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் தமிழ்ப் பெரும் புலவர் அரசஞ்சண்முகனார் 156வது பிறந்தநாள் விழா நடந்தது.அறக்கட்டளை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வெள்ளாளர் உறவின்முறை தலைவர்கள் தங்கராஜ், சுகுமார், கவுரவத் தலைவர் ராஜகுமாரன், அறக்கட்டளையினர் கண்ணன், கதிரேசன் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் தலைவர் முருகேசன், சன்மார்க்க சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். விவேகானந்த கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் முத்தையா, சண்முகம் பேசினர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்ளுக்கு பரிசும், துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தமிழரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை