உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நோயாளிக்கு கைகொடுத்து உதவிய பா.ஜ.,

நோயாளிக்கு கைகொடுத்து உதவிய பா.ஜ.,

மதுரை: மதுரை விளாங்குடி சமையல் தொழிலாளி காட்டுராஜா 50. ஒரு மாதத்திற்கு முன் வீடு திரும்பிய இவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பணம் கேட்டு தாக்கினர். இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கவனிக்க உறவினர்கள் இல்லாத நிலையில் வெளியேற்றப்பட்டவர் பஸ் ஸ்டாப்பில் படுத்துக் கிடந்தார். இதையறிந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் ஏற்பாட்டில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். கலெக்டர் சங்கீதாவிடம் முறையிட்டார். இதையடுத்து செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் உதவியுடன் மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில் மீண்டும் அவரை சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை