உள்ளூர் செய்திகள்

வி.சி.க., மறியல்

மதுரை: மதுரை ஒத்தக்கடை திருவள்ளுவர் நகரில் உள்ள குப்பை கிடங்கில் கழிவுகளை கொட்டுவதால், சுகாதாரக் கேடு  கூறி ஏற்படுவதாக வி.சி.க., வினர் ஒத்தக்கடை –- மேலுார் ரோட்டில் நேற்று காலை 10 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஈழவளவன் தலைமையில், மாவட்டச் செயலாளர் அரசமுத்துப்பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீசார்,  ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை கிடங்கிற்கு பூட்டு போட்டனர். இதைதொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ