உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைனில் விளையாடிய சிறுவன் தற்கொலை

ஆன்லைனில் விளையாடிய சிறுவன் தற்கொலை

மதுரை:மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 17 வயது மகன் பிளஸ் 1 படிப்பை முடித்து விட்டு, பள்ளிக்கு செல்லாமல் ஓராண்டாக வீட்டிலேயே இருந்தார். மொபைல் போனில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்தார். பெற்றோர் கண்டித்தும், தொடர்ந்து விளையாடினார். நாளடைவில் விளையாட்டில் 'டாஸ்க்கை' முடிக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானார். நேற்று முன்தினம் மாடியில் இருந்தபோது பக்கத்து வீட்டு சிறுவன் வந்தான். அவனிடம் 'என் அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்' எனக் கூறி, மொபைல் போனை உடைத்துவிட்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை