உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குண்டும், குழியுமான குராயூர் ரோடு

குண்டும், குழியுமான குராயூர் ரோடு

திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் குராயூரில் ஜல்தன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கு குழி தோண்டி பல நாட்களாகியும் குழாய் பதிக்காமல் தாமதபடுத்தி வருகின்றனர்.மருதங்குடி - கள்ளிக்குடி ரோட்டில் பள்ளிக்கு முன்பாக 50 மீட்டர் தொலைவுக்கு குழாய் அமைக்க ஒரு வாரத்திற்கும் மேலாக குழியை தோண்டுவதும் மூடுவதுமாக உள்ளனர். குழாய் அமைக்கும் பணியை திட்டமிட்டு முடிக்காததால், அவ்வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள் கிராமத்தைச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.விரைவில் குடிநீர் அமைக்கும் பணியை முடித்து குடிநீர் வழங்கவும், பள்ளி மாணவர்களுக்கு பாதையில் தொந்தரவு இல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ