உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானியத்துடன் தொழில்புரிய பட்டதாரிகளுக்கு அழைப்பு

மானியத்துடன் தொழில்புரிய பட்டதாரிகளுக்கு அழைப்பு

பேரையூர் : வேளாண் துறை சார்ந்த சுயதொழில் புரிய பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது என சேடப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சுயதொழில் புரிய வங்கி கடன் பெற வேண்டும். வயது 21- - 40 க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும்தனியார் பணியில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரிக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். 10, 12ம்வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ்கள், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், வங்கி கடன் ஒப்புதல் ஆவணம், தொழில் விவரம் விவரங்களுடன் சேடபட்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ