உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் நிறைவேற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் நிறைவேற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : தமிழகத்தில் அரசுத்துறை அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:மாற்றுத்திறனாளியான என்னைப் போன்றவர்கள் பொது இடங்கள், அரசுத்துறைகளின் அலுவலகங்களுக்கு சென்று வருவதில், பஸ்களில் பயணம் செய்வதில் நடைமுறை சிரமங்களை சந்திக்கின்றனர். இவர்களுக்கு சட்டத்தில் பல்வேறு உரிமைகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் பொது கட்டடங்கள், அரசுத்துறைகளின் அலுவலகங்களில் சரிவு பாதை, கைப்பிடிகள், லிப்ட்கள், சக்கர நாற்காலிகள், குடிநீர், மேற்கத்திய பாணியிலான கழிப்பறைகள், பிரெய்லி அறிவிப்பு பலகைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை முதன்மைச் செயலர், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, இதில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ