மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
20 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
20 hour(s) ago
மதுரை : மதுரையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் மத்திய அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிரான சஸ்பெண்ட், பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழக்கு தாக்கல் செய்ய சென்னையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சி.ஏ.டி.,) உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் அங்கு சென்று வருவதில் சிரமங்கள் உள்ளன. பொருளாதாரம், கால விரையம் ஏற்படுகிறது.தென் மாவட்டங்கள் பயனடையும் வகையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மதுரையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் கிளையை அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு மத்திய சட்டத்துறை செயலர், நிர்வாக தீர்ப்பாய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
20 hour(s) ago
20 hour(s) ago