உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாற்றாண்டு விழா

நுாற்றாண்டு விழா

மதுரை: அகில இந்திய நுாற்போர் சங்கத்தின் நுாற்றாண்டு விழா மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது. சர்வோதய சங்கத்தலைவர் ராஜூ வரவேற்றார். டில்லி தேசிய காந்தி மியூசிய இயக்குநர் அண்ணாமலை தலைமை வகித்தார். வார்தா சர்வ சேவா சங்கத்தலைவர் சந்தன்பால் துவக்கி வைத்தார். சர்வ சேவா சங்க காதி சமிதி ஒருங்கிணைப்பாளர் அசோக் சரண், மதுரை மியூசிய பொருளாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சர்வோதய மண்டலின் தலைவர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு சர்வோதய சங்க செயலாளர் சரவணன் ஆகியோரின் கலந்துரையாடல் நடந்தது. செயலாளர் நந்தாராவ் நன்றி கூறினார். கல்வி அலுவலர் நடராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை