உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத்திய தொகுதி சிறப்பு முகாம்

மத்திய தொகுதி சிறப்பு முகாம்

மதுரை: மதுரை மத்திய சட்டசபை தொகுதியில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் அமைச்சர் தியாகராஜன் தலைமையில் நடந்தது.மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். வருவாய் துறையில் 477, மாநகராட்சி 106, மின்வாரியம் தொடர்பாக 5 உட்பட 662 மனுக்கள் வரப்பெற்றன.அமைச்சர் பேசுகையில், இம்முகாமில் பெற்ற அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர், துறை செயலரிடம் மனுக்களை வழங்கி அதற்கு தேவையான நிதி ஒதுக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார். ஆர்.டி.ஓ., ஷாலினி, தனித்தாசில்தார் சங்கீதா, மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் முத்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ