மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
34 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
35 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
37 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
38 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
38 minutes ago
மதுரை : மதுரையில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயிரியல் பகுதி எளிதாகவும், இயற்பியல் பகுதி சற்று கடினமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வில் பங்கேற்க மாவட்டத்தில் 9504 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) விதித்துள்ள கட்டுப்பாடுகள் அடிப்படையில் 14 பள்ளி, கல்லுாரிகளில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.மதுரை மேலக்காலை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் நீண்ட முடியுடன் தேர்வுக்கு வந்தார். அவரது முடியில் 'ரப்பர் பேன்ட்' போட்டிருந்தார். அதை கழற்றி பலத்த சோதனை செய்து பின்னர் அனுமதித்தனர். 53 வயது ஆசிரியர், 50 வயது வழக்கறிஞர் உட்பட 9141 பேர் தேர்வில் பங்கேற்றனர். 363 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். மையங்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. சில மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவர்களிடம் கெடுபிடி காட்டப்பட்டது. அரசின் 7.5 இட ஒதுக்கீடு அடிப்படையில் 799 பேர் பங்கேற்றனர்.என்.டி.ஏ., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபா கூறுகையில், நீட் நுழைவு தேர்வு குறித்து மாணவர்கள் நன்கு விழிப்புணர்வுடன் உள்ளனர். ஹால்டிக்கெட்டில் ஆடை கட்டுப்பாடு உள்ளிட்ட என்.டி.ஏ., தெரிவித்துள்ள நடைமுறைகளை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் மையங்களுக்கு அனுமதிப்பதில் எவ்வித பிரச்னையும் எழவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார். மாணவர்கள் கூறியதாவது:தாரணி, தேனி : சற்று பதட்டமாகவே தேர்வு அறைக்குள் சென்றேன். வினாத்தாள் பெற்றவுடன் எளிமையான வினாக்களால் சந்தோஷமாக இருந்தது. உயிரியல் பகுதிகளில் அதிக வினாக்களுக்கு விடையளித்தேன். முழு மதிப்பெண் கிடைக்கும். பிளஸ் 1, பிளஸ் 2 மாநில பாடத்திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள் இடம் பெற்றது. எனவே அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறேன்.பவானி, மதுரை: இயற்பியல் பகுதியில் கணக்கு சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெற்றதால் உயிரியல், வேதியில் பகுதியில் அதிக கவனம் செலுத்தினேன். உயிரியலில் தாவரவியல் பகுதியில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் வினாக்கள் எளிமையாக இருந்தன. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது.
34 minutes ago
35 minutes ago
37 minutes ago
38 minutes ago
38 minutes ago