வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காம தூங்கிடும் ,ஆனால் பழியை தூக்கி கொரோனா மருந்து மீது போட்டுவிடும் , கர்நாடக அரசு செய்ததினால் இதனை சொல்கிறேன்
மதுரை: மதுரையில் உணவுப்பாதுகாப்புத்துறை அனுமதிக்காத நிறங்களை (புட் கலர்) சிக்கன் 65, சிக்கன் ரைஸ், இனிப்பு வகைகள் உட்பட பல்வேறு உணவுகளில் சேர்த்த 108 கடைகளின் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டோர கடைகள், 'பாஸ்ட்புட்' கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் 'சன்செட் எல்லோ' உட்பட உணவுக்கு அனுமதிக்கப்படாத நிறங்களை பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிடும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அசைவ உணவுகளில் சிவப்பு நிறத்தையும் இனிப்பு வகைகளில் மிக்சரில் சேர்க்கப்படும் பச்சைநிற பட்டாணி, மஞ்சள், சிவப்பு, பச்சை நிற பூந்திகளும் ஆபத்தானவை. இவையெல்லாம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிறங்கள் என்கிறார் துறையின் மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ். அவர் கூறியதாவது: தொடர் ஆய்வு மேற்கொள்கிறோம். 'சைனீஸ்' உணவு சமைக்கும் ஓட்டல், ரோட்டோர கடைகளில் சிக்கன் 65, சிக்கன் பிரைடு ரைஸ் இவற்றில் அனுமதிக்கப்படாத சிவப்பு நிறத்தை பயன்படுத்துகின்றனர். இவை பார்ப்பதற்கு 'பளபள'வென்று சிவப்பாக தெரிந்தாலும் சாப்பிட்டால் உடலுக்கு கெடுதி. 2024 ஏப்ரல் முதல் 2025 ஜூன் வரை நடந்த ஆய்வில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 108 கடைகளின் உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது என்று நிரூபிக்கப்பட்டதால் இக்கடைகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் 33 கடைகளின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு ரூ.10.99 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், பாலித்தீனுக்கு தடை பஜ்ஜி முதல் உணவு வரை பாலித்தீன் தாளில் கட்டினாலும் சட்னி, சாம்பார் ஆகியவற்றை பாலித்தீன் பைகளில் வழங்கினாலும் அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம். 'பாயில்' பேப்பர், 'பாயில்' பைகளிலும் வாழை இலையிலும் உணவுப்பொருட்களை வழங்கலாம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. பொரித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை பெறுவதற்கு ஏற்ப பழைய எண்ணெய் வாங்கும் ஏஜென்சிகள் உணவுப்பாதுகாப்புத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறையில் மாதந்தோறும் 5 முதல் 7 டன் எண்ணெய் வீதம் 2024 ஏப். முதல் 2025 ஜூன் வரை, பல நுாறு கடைகளில் இருந்து 283 டன் பழைய எண்ணெய் பெறப்பட்டுள்ளது. உணவு விற்கும் போதே வாங்குவோரின் உடல்நலத்தையும் மனதில் வைத்து வியாபாரம் செய்தால் அபராதம், கடைகளுக்கு சீல், நீதிமன்ற நடவடிக்கை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். ரோட்டோர கடைகள், 'பாஸ்ட்புட்' உட்பட 1000 கடைக்காரர்களுக்கு ஆக. 13 முதல் 'பாஸ்டாக்' பயிற்சி இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு முகாமிலும் பயிற்சிக்கு 50 முதல் 100 பேர் வீதம் தேர்ந்தெடுத்து உணவை சுகாதாரமாக கையாள்வது, மூலப்பொருட்களை சுத்தமாக வைப்பது, தன்நலம் பேணுவது உட்பட பயிற்சி அளிக்க உள்ளோம் என்றார்.
மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காம தூங்கிடும் ,ஆனால் பழியை தூக்கி கொரோனா மருந்து மீது போட்டுவிடும் , கர்நாடக அரசு செய்ததினால் இதனை சொல்கிறேன்