உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 18 வயதுக்குட்பட்டோர் டென்னிஸ்

18 வயதுக்குட்பட்டோர் டென்னிஸ்

மதுரை : மதுரைக் கல்லுாரியில் டி.வி.எஸ்., ஐ.டி.எப்., சார்பில் 18 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விஷால், ஆஹான் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் விஷால் வாசுதேவ் 6 -- 3, 7 -- 6(2) செட்களில் ஆரவ் சாவ்லாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஹான் 6 -- 1, 6 -- 1 செட்களில் ஸ்ரீசைலேஸ்வரி வேல்மணிகண்டனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஹிர்த்திக் கடகம், சவுர்யா சமலா ஜோடி 6 - - 3, 7 - - 6(6) செட்களில் ஆரவ் சாவ்லா, பிரகாஷ் சரண் ஜோடியை வீழ்த்தினர்.மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சன்மிதா ஹரிணி லோகேஷ், தீப்ஷிகா வினாயமூர்த்தி ஜோடி 7 -- 5, 6 -- 4 செட்களில் சஹோடா அர்டிக்பவா, சமீரா கசீவா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றனர். விளையாட்டு இயக்குநர் ஹிடன் ஜோஷி ஏற்பாடுகளை செய்திருந்தார்.வெற்றி பெற்றவர்களை முதல்வர் சுரேஷ், பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், செயலாளர் நடனகோபாலன், தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சூர்யராஜன், மார்ட்டின் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ