போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு
மதுரை : நேற்று இரவு மதுரை அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் கமிஷனர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்து 'சிசிடிவி' கேமராக்களின் செயல்பாடுகள், நோயாளிகள், மருத்துவர்களின் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக மருத்துவமனை வளாகத்திற்குள் போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறித்து உடனடியாக மனு பெற்று தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூறினார்.மருத்துவமனை வளாகத்தில் கேட்பார் இன்றி நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தி சமூக விரோதிகளின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.