உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., போராட்டத்தில் மாவட்டம் மாறிய நிர்வாகிகளால் குழப்பம் எல்லை பிரச்னையால் சர்ச்சை

தி.மு.க., போராட்டத்தில் மாவட்டம் மாறிய நிர்வாகிகளால் குழப்பம் எல்லை பிரச்னையால் சர்ச்சை

மதுரை: மதுரையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நகர் தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்தில் அமைச்சரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அமைச்சர் மூர்த்திக்கு உட்பட்ட வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றதால் 'எல்லை' சர்ச்சை எழுந்தது.லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பி.க்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது.மதுரை நகர் தி.மு.க., செயலாளர் தளபதி உத்தரவில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டபொம்மன் சிலை அருகே பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் ஜீவன்ரமேஷ், செந்தில் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூர்த்தி கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மாவட்ட மூவேந்திரன் (நகர் தி.மு.க., முன்னாள் துணைச் செயலாளர்) உள்ளிட்டோர் பங்கேற்று உருவ பொம்மையை எரித்தனர். இதனால் நகர் நிர்வாகிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது.நகர் பகுதி நிர்வாகிகள் கூறுகையில், போராட்டத்தில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை நகர் மாவட்டம் சார்பில் அழைக்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி - தளபதிக்கு இடையே தேவையில்லாத பனிப்போர் ஏற்படும். கட்சி தலைமைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர். இப்பிரச்னையால் போராட்டத்தின் நோக்கம் மாறி, உட்கட்சி மோதல் வெளிப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை