உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருவில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு

தெருவில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு

அலங்காநல்லுார், ; அலங்காநல்லுார் ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சி ஒட்டுப்பட்டியில் தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் தனிச்சியம், அலங்காநல்லுார் இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது ஒட்டுப்பட்டி தெருவில் இருந்து கழிவுநீர் சாலையை கடந்து செல்லும் பழமையான குழாய் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தெருவில் தேங்கியுள்ளது.ஜெயபிரகாஷ் கூறியதாவது: எங்கள் தெருவில் ஆண்டுக் கணக்கில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை, புழுக்கள் உற்பத்தியாகி வீட்டுக்குள் ஊறுகின்றன. மழை நேரங்களில் குறுகிய தெரு முழுவதும் ஒரு அடி தண்ணீர் தேங்கும். விஷ பூச்சிகளும் வருவதால் அச்சத்துடன் வசிக்கிறோம். பலமுறை கூறியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ