உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை நமீதாவிடம் மதச் சான்று கேட்டதாக கோயில் ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. 'மனவருத்தத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நமீதா வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.நடிகையும், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய சென்றார். ஊழியர்கள் அவரிடம் பாதுகாப்பு கருதி சில விபரங்களை கேட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.அதில் கோயில் பெண் அலுவலர் உள்ளிட்டோர் 'எங்களிடம் ஹிந்து மதத்திற்கான சான்றிதழ் உள்ளதா' எனக் கேட்டனர். நான் ஒரு நடிகை. திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றுள்ளேன். என் குழந்தைக்கு ஹிந்து பெயர் (கிருஷ்ணா) தான் வைத்துள்ளேன். குங்குமம் நெற்றியில் வைத்துவிட்டுத் தான் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதுவரை எந்த கோயிலிலும் என்னிடம் இதுபோன்று ஊழியர்கள் நடந்து கொண்டதில்லை. ஊழியர்களுக்கு யாரிடம் எப்படி பேசுவது எனத் தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.கோயில் ஊழியர்கள் கூறுகையில், 'முகக்கவசம் அணிந்து வருவோரிடம் பாதுகாப்பு கருதி இதுபோல் கேட்பது நடைமுறை தான். அவர் நடிகை என்பது முன்கூட்டியே தெரியாது' என்றனர்.

அரசியலாக்க வேண்டாம்: நமீதா

கோயிலில் நடந்த சம்பவம் குறித்து நமீதா, அவரது கணவர் கூறியதாவது: மதுரை இஸ்கான் கோயிலுக்கு வந்தபோது அதன் நிர்வாகிகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம். கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் எங்களை தடுத்து 'ஹிந்துவா, முஸ்லிமா' என கேள்வி எழுப்பி, 'நீங்கள் முஸ்லிம் எனத் தகவல் கிடைத்துள்ளது. எனவே ஹிந்து என்பதற்கான சான்றிதழ் காட்டுங்கள்' என்றனர். ஆதார் அட்டையை காண்பித்தபோது 'அதில் மத அடையாளம் இல்லை' எனக் கூறி அவமரியாதையாக பேசினர். 15 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் செய்து காக்க வைத்தனர்.குங்குமத்தை நெற்றியில் வைக்க சொல்லி உள்ளே அனுமதித்தனர். நாடு முழுவதும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம். பிறப்பால் நாங்கள் ஹிந்து. உரிய விளக்கம் அளித்தும் ஊழியர்கள் ஏற்கவில்லை. நான் (நமீதா) இதுவரை இங்கு 5 முறை தரிசனம் செய்துள்ளேன். இதுபோல் நடந்ததில்லை. தரிசனம் சிறப்பாக இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி. இதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. கோயிலுக்கு வருவோரை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். தகுதியான அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
ஆக 28, 2024 08:25

முதலில் சிசிடிவி பதிவுகளை ஆராயவும் தவறு அலுவலகங்கள் மீதென்றால் தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். ஆனால் அறக்கொள்ளைத்துறை அதிகாரிகள் கண்துடைப்பு செய்வார்கள்


ஆரூர் ரங்
ஆக 27, 2024 15:40

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஜாஹிர் உசேன் நுழைந்த போது அறநிலையத்துறை ஆட்சேபிக்கவில்லை. கன்னியாஸ்திரிகள் சீருடையுடன் ஆலயத்தில் நுழைந்த போது கேட்கவில்லை. தஞ்சை கோவிலுக்குள் உட்கார்ந்து முஸ்லிம் குடும்பம் பிரியாணி சாப்பிட்ட வீடியோ வந்ததே. என்ன நடவடிக்கை?


தஞ்சை மன்னர்
ஆக 27, 2024 14:02

என்ன நமீதாவை தெரியாது என்று சொல்லி விட்டன இதற்க்கே IPC கீழ் வழக்கு பதிவு செய்தலும் செய்யும் பி சே பி


rsudarsan lic
ஆக 27, 2024 13:59

10 பேருக்கு வேலை போகப்போகுது அந்த பாவம் சும்மா விடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 27, 2024 13:43

ரெயில்வே ஸ்டேஷன்களில் தமிழ்ல பேசி டிக்கெட்டு வாங்க முடியல என்று கூறப்படும் புளுகைத்தான் நம்புவோம் .... எங்களை திராவிடம் அப்படித்தான் சொல்லவேண்டும் என்று மூளைச்சலவை செய்துள்ளது ...


sridhar
ஆக 27, 2024 10:58

மதச்சான்று கேட்டவன் ஹிந்துவா ? . அறநிலையத்துறையின் மாற்றுமதத்தினர் ஆட்டம் அதிகமா இருக்கு .


Kanns
ஆக 27, 2024 09:56

Namitha is doing Cheap Politics for Publicity using Paid News.


sankaran
ஆக 27, 2024 08:48

பூஜாரி உட்பட எப்படி பழக வேண்டும் , எப்படி பேச வேண்டும் என்று தெரிவதில்லை.. இதுதான் இந்து கோயிகளில் உள்ள பிரச்னை.. இப்போ எல்லா மக்களுக்கும் படிப்பறிவு உள்ளது.. அந்த காலம் வேறு.. இதை புரிந்து கொண்டு கோயில் நிர்வாகத்தினர் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்...


rsudarsan lic
ஆக 27, 2024 08:44

சனைக்கே பாபு கிட்ட சொல்லி இவங்களை தக்கார் பதவியில அமர்த்திடலாம்


rsudarsan lic
ஆக 27, 2024 08:42

குங்குமம் கூட இல்லா... எப்படி அனுமதிப்பது?


kamaraj jawahar
ஆக 27, 2024 22:12

குங்குமம் வைப்பது அவரவர் சொந்த விருப்பம். இன்னொருவர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீர்