| ADDED : ஆக 09, 2024 02:41 AM
மதுரை:தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:சாலைகள், வீதிகளில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மனிதர்களை கடிப்பதால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளாவில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, 87,000 தெரு நாய்களுக்கு அம்மாநில அரசு, 2019ல் கருத்தடை செய்தது. ரேபிஸ் நோய் வராமல் தடுக்க, 2020ல், சென்னையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு அரசு செயல்படுத்தியது.பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், மத்திய கால்நடை, மீன்வளத்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், சுகாதாரத்துறை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆக., 29க்கு ஒத்திவைத்தனர்.