உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிப்படை வசதிகள் கேட்டு வலியுறுத்தல்

அடிப்படை வசதிகள் கேட்டு வலியுறுத்தல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சி, வாசிநகர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தில் பொதுச் சுகாதார வளாகம் இல்லாததால் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கும் பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். சமீபத்தில் உள்ளூர்காரர் ஒருவர் தனது தோட்டத்திற்கு வேலி அமைக்கும்போது, அந்தப் பாதையையும் சேர்த்து அமைத்துள்ளார். அதிகாரிகள் இந்தப் பகுதியை ஆய்வு செய்து பாதையை உருவாக்கித்தர வேண்டும். கிராமத்திற்கு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத்தி சப்கலெக்டர் உத்கர்ஷ்குமாரிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை