உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி ஆய்வுக்கூட்டம்

கல்வி ஆய்வுக்கூட்டம்

மதுரை: தொடக்கக் கல்வித்துறை சார்பில் டி.வாடிப்பட்டியில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் மோசஸ் முன்னிலை வகித்தார். 70க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். குறைந்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.  தென்கரை முத்துப்பிள்ளை பேசுகையில், அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இருந்தால் தான் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அதற்கு ஏற்ப தலைமையாசிரியர், ஆசிரியர் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் ஆசிரியர் இல்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்றார். இதையடுத்து அதிக மாணவர்களை சேர்த்த பள்ளி தலைமையாசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ