உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தனி பி.டி.ஓ., ஊரக வளர்ச்சி பணியாளர்கள் வலியுறுத்தல்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தனி பி.டி.ஓ., ஊரக வளர்ச்சி பணியாளர்கள் வலியுறுத்தல்

மதுரை, ; தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., பணியிடம் உருவாக்கப்பட வேண்டும்'' என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சார்லஸ், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஊராட்சி செயலாளர்களுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும். தேர்வுநிலை சிறப்பு ஊதியம், மூன்று ஆண்டுக்கு ஒருபணிமாறுதல், ஓய்வூதியம் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வேண்டும்.உதவி இயக்குனர்களுக்கு இணை இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குனர், உதவி மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர், ஒன்றிய பணிமேற்பார்வையாளருக்கு ஒன்றிய பொறியாளர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். ஜல்ஜீவன் திட்ட கணினி உதவியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை, கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர், ஒன்றிய அலுவலகங்களில் உள்ள கணினி இயக்குனர்களுக்கும், மகளிர் திட்ட வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றம் 1843 கணினி உதவியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தியதற்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., பணியிடம் உருவாக்க வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் வி.பி.ஆர்.சி., கணக்கர்களுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ