மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
34 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
35 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
37 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
38 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
38 minutes ago
கருப்பாயூரணி: 'மதுரை வண்டியூர் ரிங் ரோட்டில் இருந்து ஆண்டார்கொட்டாரம் செல்லும் ராணிமங்கம்மாள் ரோட்டின் இருபுறமும் ஆபத்தான பள்ளங்கள் இருப்பதால் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்' என இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து மஸ்தான்பட்டி சேகர் கூறியதாவது:வண்டியூர் ரிங் ரோட்டில் இருந்து கருப்பாயூரணி, காளிகாப்பான் வழியாக திருமோகூர் வரை செல்லும் இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. மழைக்காலங்களில் இதில் டூவீலரில் கூட செல்ல முடியாது. தற்போது தார்ரோடு அமைத்ததால் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வண்டியூர், சங்குநகர், யாகப்பாநகர் பகுதியினர் காரில் ரிங்ரோடு சிவகங்கை சந்திப்பு பகுதிக்கு செல்லும் வழியில் டோல்கேட் உள்ளது. இதனால் பலர் ராணிமங்கம்மாள் ரோட்டை பயன்படுத்திச் செல்கின்றனர். ஏராளமான வாகனங்கள் செல்லும் குறுகலான இந்த ரோட்டில் 700 மீட்டர் துாரம் வரை ரோட்டின் இருபுறமும் ஆழமான பள்ளங்கள் உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வந்தால் விலகிச் செல்ல இடமின்றி திணறுவது வாடிக்கை. பெரும் விபத்து ஏற்படுவதற்குள் குவாரி பள்ளங்களில் பாதுகாப்பாக, ரோட்டின் இருபுறமும் தடுப்புக் கம்பிகளும், மின்விளக்குகளும் அமைக்க வேண்டும் என்றார்.
34 minutes ago
35 minutes ago
37 minutes ago
38 minutes ago
38 minutes ago