உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீரில் மிதக்கும் டிரான்ஸ்பார்மர்கள்

கழிவுநீரில் மிதக்கும் டிரான்ஸ்பார்மர்கள்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி மெயின் ரோட்டில் தாதம்பட்டி மயானம் எதிரே மழைநீருடன் கழிவுநீரும் மின்சார டிரான்ஸ்பார்மரை சூழ்ந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு தாழ்வான பகுதியில் உள்ள 3 டிரான்ஸ்பார்மர்களை சூழ்ந்துள்ள கழிவுநீரால் மின் விபத்து அச்சம் மற்றும் சுகாதார பாதிப்பு உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அதனை இயக்க, பழுதுநீக்க சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் இருந்து மழைநீர் வெளியேற வாய்க்கால் இருந்தது. சாலை விரிவாக்க பணியின் போது வாய்க்கால் குறுகலாகி, ஆக்கிரமிப்புகளால் மாயமானது. ரோட்டில் கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது. 2022ல் கனமழையால் தேங்கிய மழைநீரை வெளியேற்ற சாலையோரம் இயந்திரம் மூலம் வாய்க்கால் வெட்டி, மோட்டார் வைத்து பேரூராட்சி நிர்வாகம் தற்காலிக தீர்வு ஏற்படுத்தியது. இப்பகுதியில் மாயமான வாய்க்காலை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை