உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம உதவியாளர்களுக்கு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே அமல்படுத்த வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் அனைத்துத் துறை காலியிடங்களிலும் நியமித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட துணைத் தலைவர் மேகலாதேவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தர்மராஜ், இணைச் செயலாளர்கள் திருப்பதி, வீரம்மாள், ஜெயந்தி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஒய்யம்மாள் வரவேற்றார். மாநில செயலாளர் நுார்ஜஹான், மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் நடராஜன் உட்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை